கோவையில் பேரனை கொன்ற பாட்டி எங்கே


கோவையில் பேரனை கொன்ற பாட்டி எங்கே
x
கோவையில் பேரனை கொன்ற பாட்டி எங்கே
தினத்தந்தி 23 Oct 2021 9:36 PM IST (Updated: 23 Oct 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் பேரனை கொன்ற பாட்டி எங்கே

துடியலூர்

கோவை அருகே கவுண்டம்பாளையம் நாகப்பா காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 31). கட்டிட வடிவமைப்பாளர். இவரது மனைவி ஐஸ்வர்யா (24). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. இரட்டை குழந்தைகள் என்பதால் குழந்தைகளை பார்த்து கொள்ள ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி (45) மதுரையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில் சாந்தி திடீரென்று 2 குழந்தைகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. பெண் குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இதனிடையே பேரன் என்றும் பாராமல் கொடூரமாக கொன்று விட்டு தப்பிய சாந்தி, தற்போது தலைமறைவாக உள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோவையை அடுத்த துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  தலைமறைவாக உள்ள சாந்தி எங்கே என்று போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

சாந்தியின் கணவர் மதுரையில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். எனவே அவர் மதுரைக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படை போலீசாரின் ஒரு  பிரிவு  மதுரை சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சாந்தி அவசர, அவசரமாக வீட்டை விட்டு வெளியேறும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. அவர் மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. 

இருப்பினும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை நம்பி 2 குழந்தைகளையும் தனியாக விட்டு சென்றது ஏன்?, சாந்தி எந்த மருத்துவமனையில் மன நலம் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொலை செய்தால், தப்பி செல்லாமல் அங்கேயே தான் இருப்பார்கள். ஆனால் சாந்தி தப்பி சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் மன நலம் பாதிப்புக்கு எத்தகைய மருந்துகள் எடுத்து கொண்டார் என்பது தெரியவில்லை. 

சாந்தியை கைது செய்தால் மட்டுமே முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். எனவே அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story