போலீஸ்காரர் விஷம் குடித்ததால் பரபரப்பு


போலீஸ்காரர் விஷம் குடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Oct 2021 1:57 AM IST (Updated: 24 Oct 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக பணியாற்றிய போலீஸ்காரர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக பணியாற்றிய போலீஸ்காரர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ்காரர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகன் காசிமாயன் (வயது 35). போலீஸ்காரரான இவர், உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். 
இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். தற்போது இவர் உசிலம்பட்டி போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். 

விஷம் குடித்தார்

இந்த நிைலயில் நேற்று வீட்டில் இருந்த காசிமாயன் திடீரென விஷம் குடித்து விட்டார். 
இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 
போலீஸ்காரர் காசிமாயன் எதற்காக விஷம் குடித்தார்? என உசிலம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story