புகார் பெட்டி
புகார் பெட்டி
திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்
விருதுநகர் முனிசிபாலிட்டி அலுவலகம் பின்புறம் உள்ள ஒரு பள்ளியின் அருகில் பாதாள சாக்கடை கால்வாய் மூடி மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் முதியவர்களும், சிறுவர்களும் தவறி குழியில் விழும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் நடந்து செல்பவர்களும் குழிக்குள் விழுந்து விடும் நிலை உள்ளதால் உடனடியாக சாக்கடை கால்வாயை மூட வேண்டும்.
மணிகண்டன், விருதுநகர்.
எரியாத தெருவிளக்குகள்
ராமநாதபுரம் வாட்டர் டேங் ரோடு பகுதியி்ல் உள்ள மின்விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவில் பெண்கள் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். எனவே இதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமுதா, ராமநாதபுரம்.
தேங்கி நிற்கும் மழைநீர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா சண்முகநாதபுரம் ஊராட்சியில் மேற்கு 3-வது வீதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாகி உள்ளது. கொசுக்கடியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியசாமி, சண்முகநாதபுரம்.
குடிநீர் பிரச்சினை
ராமநாதபுரம் மாவட்டம் ஓலைக்குடி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி இங்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கெவிக்குமார், ராமநாதபுரம்.
சாலையில் சுற்றும் கால்நடைகள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தம்பிபட்டியில் உள்ள சாலைகளில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிகமாக சுற்றி திரிகின்றன. சில நேரங்களில் மாடுகள் சாலையின் குறுக்கே படுத்து கிடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. சில நேரங்களில் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவமும் நடக்கிறது. எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
விக்னேஸ்வரன், திருப்பத்தூர்.
கொசுக்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு 8-வது வார்டு பகுதியில் சாலை வசதி, சாக்கடை வசதி இல்லை. இதன் காரணமாக கழிவுநீர், மழைநீர் செல்ல வழியி்ன்றி சாலையில் ஆங்காங்கே குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்வின், ராமநாதபுரம்.
Related Tags :
Next Story