ஈரோடு சூரம்பட்டியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது


ஈரோடு சூரம்பட்டியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 24 Oct 2021 2:30 AM IST (Updated: 24 Oct 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சூரம்பட்டியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது.

ஈரோடு
ஈரோடு சூரம்பட்டியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது.
இரவில் மழை
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் வெயில் கொளுத்தியது. அதைத்தொடர்ந்து இரவில் இடி -மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சில இடங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து ஓடியது. மேலும் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு வெண்டிப்பாளையம் பகுதியில் உள்ள புதிய ரெயில்வே நுழைவு பாலம், பழைய ரெயில்வே நுழைவு பாலம், கே.கே.நகர் பகுதியில் உள்ள ரெயில்வே நுழைவு பாலங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். ஈரோடு வ.உ.சி. பூங்கா சேறும், சகதியுமாக காணப்பட்டதால் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கச்சென்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
வீடு இடிந்து விழுந்தது
நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக ஈரோடு சூரம்பட்டி பகுதியில் உள்ள நல்லசாமி என்பவருடைய ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. முன்னதாக அந்த வீட்டில் தங்கி இருந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (வயது 27), முன்சி (30), அணில் (30), ராஜீவ் (35) உள்பட 8 பேர் வீடு ஒழுகியதால் அங்கிருந்து எழுந்து அருகில் உள்ள வீடுகளுக்கு தூங்கச்சென்றனர். இதன் காரணமாக அவர்கள் உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தாளவாடி -1, மொடக்குறிச்சி -5, கொடிவேரி -8, சென்னிமலை -9, பவானி -14.4, சத்தியமங்கலம் -15, நம்பியூர் -24, எலந்தகுட்டை மேடு -24.2, குண்டேரி பள்ளம் 26.2, கோபி -28.6, பவானிசாகர் -41.3, ஈரோடு -43, அம்மாபேட்டை -45.4, பெருந்துறை -87, கவுந்தப்பாடி -102.2, வரட்டுப்பள்ளம் -142.8. மாவட்டம் முழுவதும் 617.1 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 36.3 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.
1 More update

Next Story