திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு- வாகன ஓட்டிகள் வேதனை


திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு- வாகன ஓட்டிகள் வேதனை
x
தினத்தந்தி 24 Oct 2021 2:31 AM IST (Updated: 24 Oct 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் வேதனைப்பட்டார்கள்.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் வேதனைப்பட்டார்கள். 
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டம் வழியாக கர்நாடகாவுக்கு செல்வதற்கு இது முக்கிய பாதையாகும். அதனால் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும். இங்கிருந்து கர்நாடகாவுக்கும் எப்போதும் வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும். 
திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. 
சாதாரணமாக வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளை கடந்து விடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் வளைவுகளை கடக்க முடியாமல் பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு என்பது தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது. 
லாரி கவிழ்ந்தது
இந்தநிலையில் நேற்று முன்தினம் மரக்கட்டைகள் ஏற்றிவந்த லாரி ஒன்று 26-வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்தது. இதனால் மலைப்பாதையில் பலகிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் மீட்பு வாகனத்தை வரவழைத்து லாரியை அப்புறப்படுத்தினார்கள். அப்போது நீண்ட நேரம் நின்றிருந்த வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முயன்றன. 
வேதனை
அப்போது நேற்று முன்தினம் இரவு 9½ மணி அளவில் மைசூருவில் இருந்து கோவைக்கு அரிசி பாரம் ஏற்றி வந்த லாரி டீசல் தீர்ந்துபோய் 26-வது கொண்டை ஊசி வளைவில் நின்றது. இதனால் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து அதிகாலை 3 மணி அளவில் டீசல் கொண்டுவந்து நிரப்பி லாரி அங்கிருந்து சென்றது. அதன்பின்னரே போக்குவரத்து தொடங்கியது. 
அதிகாலை நேரத்தில் மழைப்பொழிவால் ஏற்பட்ட குளிரில் வாகன ஓட்டிகள் நடுங்கியபடி காத்திருந்தார்கள். திம்பம் மலைப்பாதையின் போக்குவரத்து பாதிப்பு எப்போதுதான் தீருமோ? என்று வேதனை தெரிவித்தார்கள். 




Next Story