கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 24 Oct 2021 2:31 AM IST (Updated: 24 Oct 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடத்தூர்
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
கொடிவேரி அணை
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்களில் ஒன்று. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகே உள்ள சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க குடும்பத்துடன் வருவார்கள். இயற்கை சூழ்ந்த இடத்தில் அணை அமைந்துள்ளதால் பொதுவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் இ்ங்கே குவிந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள். 
குளிக்க தடை
இந்தநிலையில் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சீறிப்பாய்கிறது. 
இதையடுத்து சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
வெளியூரில் இருந்து நேற்று காலை கொடிவேரி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் சிலர் குளிக்க அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றார்கள். 

Next Story