குன்றத்தூர் அருகே வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ தீயில் எரிந்து சேதம்


குன்றத்தூர் அருகே வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ தீயில் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 24 Oct 2021 5:38 PM IST (Updated: 24 Oct 2021 5:38 PM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அருகே வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ தீயில் எரிந்து சேதமாகி விட்டது.

பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் சாந்தி நகரை சேர்ந்தவர் அமலநாதன் (வயது 49), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை தனது வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவில் இவரது ஆட்டோ எரிந்து கொண்டிருப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அமலநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கேட்டு அமலநாதன் வருவதற்குள் ஆட்டோ முழுவதும் தீயில் எரிந்து சேதமாகி விட்டது.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் மின்கசிவு காரணமாக ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததா? அல்லது நாச வேலை காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Next Story