இளநீர் டன் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரமாக விலை நிர்ணயம்
இளநீர் டன் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரமாக விலை நிர்ணயம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை, கோட்டூர், ஆழியாறுஆகிய பகுதிகளில் மிக அதிக அளவு இளநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மருத்துவ குணம் நிறைந்த இளநீர்கள்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது மழை நன்கு பெய்து வருவதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில்,ஆனைமலை வட்டார இளநீர்உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தற்போதுடெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளது. அறுவடையும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் மட்டும் தொடர் கனமழை காரணமாக அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. கடந்த சில நாட்களாக இளநீர் வரத்து நன்கு அதிகரித்துள்ளது. தேவையும் நன்கு உள்ளது.
இந்த வாரம் (திங்கட்கிழமை) முதல் நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையைவிட ஒரு ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.25 என நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் ஒரு டன் இளநீரின் விலை ரூ.9 ஆயிரம்என நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு,அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story