செம்மண் அள்ளிய லாரி பறிமுதல்
அலங்காநல்லூர் அருகே செம்மண் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. சமீப காலமாக பெய்து வரும் பருவ மழை காரணமாக அந்தப் பகுதிக்கு செல்லும் பாதையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சகதியாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் காணப்பட்டது.. இதனால் கிராம மக்கள் சாலையை சீரமைத்து தரும்படி ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர் டிப்பர் லாரியில் செம்மண் அள்ளி வந்து பள்ளி வளாகம், அங்கன்வாடி மையம், முன்பு போடப்பட்டது. இந்நிலையில் தகவலறிந்து வந்த கனிம வளத்துறையினர் உரிய அனுமதியின்றி மண் அள்ளிய லாரியை பறிமுதல் செய்தனர்.இதனையறிந்த கிராம மக்கள் அங்குள்ள ரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய அனுமதி பெற்று தான் மண் அள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story