தாமல் ஏரி கலங்கல் வழியாக வெளியேறும் தண்ணீரில் குளித்து மகிழும் பொதுமக்கள்


தாமல் ஏரி கலங்கல் வழியாக வெளியேறும் தண்ணீரில் குளித்து மகிழும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 Oct 2021 5:18 AM IST (Updated: 25 Oct 2021 5:18 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பொன்னையாற்றின் வழியாக பாலாற்றில் கலந்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி 4 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பி வழிகிறது.

500 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமல் ஏரி 206 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியில் இருந்து தற்போது 400 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. தொடர்ந்து 20 நாட்கள் உபரி நீர் வெளியேறும் என காஞ்சீபுரம் பாசன பிரிவு இளம்பொறியாளர் மார்கண்டன் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை தினம் என்பதால் தாமல் கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கார், இரு சக்கர வாகனங்களின் மூலம் தாமல் ஏரிக்கு வருகை புரிந்து கலங்கல் வழியாக வெளியேறும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு தாமல் ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story