மினி லாரிகள் நேருக்கு நேர் மோதல் 3 பேர் படுகாயம்
மினி லாரிகள் நேருக்கு நேர் மோதல் 3 பேர் படுகாயம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே மினி லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மினி லாரிகள் மோதல்
பொள்ளாச்சியை அடுத்த ஓரக்கலியூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 28). டிரைவர். இவர் காளிபாளையத்தில் இருந்து மினி லாரியில் தவிடு ஏற்றிக் கொண்டு மலையாண்டிபட்டிணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். லாரியில் ஈரோட்டை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி லோகநாதன் (24) என்பவர் இருந்தார். உடுமலை ரோடு கோலார்பட்டி பகுதியில் மினி லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து பூசணிக்காய்களை ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சி நோக்கி ஒரு மினி லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஹரிகரன் (20) என்பவர் ஓட்டி வந்தார். கோலார்பட்டி பகுதியில் வந்த போது 2 மினி லாரிகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் லாரிகளில் வந்த டிரைவர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ரோட்டில் சிதறி பூசணிக்காய்கள்
விபத்தில் 2 மினி லாரிகளும் பலத்த சேதமடைந்தன. தவிடு மூட்டைகளும், பூசணிக்காய்களும் ரோட்டில் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓட்டன்சத்திரத்தில் இருந்து பூசணிக்காய்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியின் டயர் வெடித்ததால் நிலைதடுமாறி எதிரே வந்த மினி லாரி மீது மோதியது தெரியவந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஹரிகரன், சுரேஷ்குமார், லோகநாதன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல்சிகிச்சைக்காக ஹரிகரனை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story