தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Oct 2021 10:25 PM IST (Updated: 25 Oct 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


பயன்படுத்த முடியாத கழிவறை 

கூடலூர் சிவசண்முக நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்ற னர். இங்கு நகராட்சி மூலம் கட்டப்பட்ட கழிவறை பயன்படுத்த முடியாமல் சுகாதாரமற்ற நிலையில் நீண்டகாலமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாமல் மூடிக்கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடிவேல், கூடலூர்.

விழிப்புணர்வு பதாகைகள்

  கோவை- பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே விபத்துகள் நடப்பதை தடுக்க வாகன ஓட்டிகளின் விழிப்புணர்வுக்காக பதாகைகள் வைக்க நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  சதீஷ்குமார், கிணத்துக்கடவு.

டவுன் பஸ்கள் நிற்குமா?

  பொள்ளாச்சி பகுதியில் இருந்து கிணத்துக்கடவு பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான டவுன் பஸ்கள் செல்கின்றன. இந்த பஸ்கள் கிணத்துக்கடவு சந்திப்பு பகுதி வரை வந்து பயணிகளை இறக்கிவிட்டு பஸ்நிலையம் சென்றால் உதவியாக இருக்கும். ஆனால் அதற்கு பதிலாக அரை கி.மீ. தூரத்துக்கு முன்பே பஸ்நிலையத்துக்கு சென்று விடுகிறது. இதனால் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே டவுன் பஸ்கள் கிணத்துக்கடவு சந்திப்பு பகுதி வரை சென்று நிறுத்த வழிவகை செய்ய வேண்டும்.
  சுரேஷ், சிக்கலாம்பாளையம்.

வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்

  சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரிப் பிரிவு பகுதியில் பி.ஏ.பி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது.. இதனால் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. எனவே கழிவுகள் கொட்டப் படுவதை தடுக்க வேண்டும்.
  எஸ்.கணேசன், சுல்தான்பேட்டை.

ஆபத்தான நிழற்குடை

  சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையம் பிரிவு அருகே மிகவும் பழுதடைந்த பயன்படுத்தாத நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். அபாய நிலையில் உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி இதனை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  அருள்குமார், செஞ்சேரிமலை.

உடைந்த குப்பை தொட்டிகள்

  தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் பல தொட்டிகள் உடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் குப்பைகளை தெருநாய்கள் இழுத்து சாலையில் போட்டுவிடுவதால் அந்த வழியாக செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே உடைந்த குப்பை தொட்டிகளை மாற்ற வேண்டும்.
  சுப்பிரமணியம், தொண்டாமுத்தூர்.

ஆபத்தான மின்கம்பம்

  கோவை மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட ஜெய்சிமாபுரத்தில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து இருக்கிறது. இதன் காரண மாக அந்த கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே விபத்துகள் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
  ஜெய்காந்த், கோவை.

தார்சாலை வேண்டும்

  கோவை சிங்காநல்லூர் 58-வது வார்டு தாமோதரசாமி லே-அவுட் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் புதர்கள் ஆக்கிர மித்து உள்ளன. பல இடங்களில் முட்கள் நிறைந்து உள்ளதால் நடந்து செல்ல முடியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும்.
  ஆர்.குமாரவேல், சிங்காநல்லூர்.

சாக்கடை கால்வாயில் அடைப்பு

  கோவை 80-வது வார்டு தாமஸ்வீதி, தியாகி குமரன் வீதி சந்திப்பு பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் சாலையில் சென்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கழிவுநீரை நடந்து செல்பவர்கள் மீது அடித்துவிட்டு செல்கின்றன. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.
  தாமஸ், கோவை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த குப்பைகள் அகற்றப்படாததால் மலை போன்று குவிந்து கிடக்கிறது. காற்று வீசும்போது அந்த குப்பைகள் அங்குள்ள வீடுகளுக்குள் வந்து விடுகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மலைபோன்று குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
  மேகநாதன், வெள்ளக்கிணர் பிரிவு.

சேறும் சகதியுமான சாலை

  கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 59-வது வார்டு நேதாஜி புரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு செல்லும் சாலை மழை காரணமாக சேறும் சகதியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
  ஜெகன், சிங்காநல்லூர்.

தெருநாய்கள் தொல்லை

  கோவை மாநகராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலனியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கூட்டங்கூட்டமாக தெருக்களில் சுற்றி வந்து அந்த வழியாக செல்பவர் களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர் கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
  பிரசாந்த், கோவை.


Next Story