மேலூர், கொட்டாம்பட்டி பகுதியில் கனமழையால் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
கனமழையால் கண்மாய்களில் உடைப்பு; நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
மேலூர்
மேலூர், கொட்டாம்பட்டி பகுதியில் கனமழையால் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
கரைகள் உடைப்பு
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் கன மழை கொட்டித் தீர்த்தது. மேலூர் தாசில்தார் இளமுருகன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் வெள்ள மீட்பு பணிகளை மேற்கொண்டனர். பட்டூர் அருகே முத்துப்பட்டியில் உள்ள ராவுத்தர் கண்மாய் மற்றும் அய்யர் கண்மாய்களின் கரைகள் உடைந்து தண்ணீர் வயல்களில் பாய்ந்து நெற்பயிர்கள் மூழ்கின.
மேலவளவு பகுதியில் இருக்கும் பரம்பு கண்மாய் சுமார் 16 வருடங்களுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. மேலவளவு வி.எஸ். நகரம் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து குடியிருப்புகள் அனைத்தும் நீரில் தத்தளிக்கிறது. வெள்ள நீர் வடியாததால் அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு ெ்வளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
பாதிப்பு
மேலும் மேலவளவு, கண்மாய்ப்பட்டி, அட்டப்பட்டி, பாப்பாகுடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தன. இதனால் 100 ஏக்கர் வரை நெல் நாற்றுகளில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேலூர் தாசில்தார் இளமுருகன் தலைமையில் வருவாய், பொதுப்பணித்துறை, வேளாண் துறையினர், கண்மாய் உடைப்புகளை மணல் மூடைகளினால் மூடி, வெள்ளநீர் வடிந்தோடும் பணிகளை செய்து வருகின்றனர்.
வீடு இடிந்தது
மேலும் கொட்டாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழையானது கொட்டித் தீர்த்தது. இந்த மழை காரணமாக மேலவளவு பகுதியில் இருக்கும் பரம்பு கண்மாய் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. இந்த கண்மாயின் உபரிநீர் கொட்டாம்பட்டியை அடுத்துள்ள கச்சிராயன்பட்டியில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது. அங்குள்ள வீடு ஒன்றின் சுவர் மழை வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. அதேபோல் அட்டப்பட்டி, பாப்பாகுடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் 100 ஏக்கர் வரை நெல் வயல்களில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய், பொதுப்பணித்துறை மற்றும் வேளாண் துறையினர் அப்பகுதிகளில் ஆய்வு செய்தனர். மேலூர் அருகே உள்ள புலிப்பட்டியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story