30 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது


30 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2021 2:04 AM IST (Updated: 26 Oct 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

30 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

சோழவந்தான்
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் செக்கானூரணி இன்ஸ்பெக்டர் சிவசக்தி, விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெப்பத்துப்பட்டி கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி 3 பேர் வந்தனர். இவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணை செய்தபோது, திண்டுக்கல் மாவட்டம் சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(வயது 20), பொம்மம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயம்(28) ஆகிய இருவரை கைது செய்து 30 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய என்.கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story