புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Oct 2021 8:38 PM GMT (Updated: 25 Oct 2021 8:38 PM GMT)

புகார் பெட்டி

மதுரை
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை மாநகராட்சி வார்டு எண்-71. சின்னக்கண்மாய் தெருவில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார குறைபாடும் டெங்கு நோயும் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ரோட்டில் கட்டிட கழிவுகளை கொட்டி உள்ளதால் சைக்கிளில் பள்ளி செல்லும் குழந்தைகள் தவறி விழுகின்றனர். பல முறை முறையிட்டும் தீர்வு இல்லை. எனவே நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சின்னக்கண்மாய் தெருமக்கள்.
கழிப்பறையை பராமரிப்பார்களா?
திருமங்கலம் பஸ் நிலையத்தில் உள்ள இலவச சிறுநீர் கழிப்பறை சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலை உள்ளது. எனவே கழிப்பறை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-ராஜா சொர்ணசேகர், சிவகாசி.
பள்ளிக்கு செல்ல சாலை
சேடபட்டி ஒன்றியம் மலப்புரம் ஊராட்சி எம்.எஸ்.புரத்தில் வசிக்கும் அருந்ததியர் மக்கள் பகுதிகளுக்கு அடிப்படை வசதி எதுவும் கிடைக்கவில்லை. மேலும் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு செல்ல சாலை இல்லாததால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமத்துடன் செல்லவேண்டிய நிலைமை உள்ளது. இனியாவது அமைத்து கொடுப்பார்களா?.
-பாண்டி, சேடபட்டி.
ரேஷன் பொருள்
வாடிப்பட்டி தாலுகா ராமையன்பட்டி பகுதி ரேஷன்கார்டுதாரர்களுக்கு போதிய பொருட்கள் கிடைப்பது இல்லை. அதுகுறித்து கேட்டால் முறையாக பதில் சொல்வதில்லை. எனவே வரும் பண்டிகை காலங்களில் ராமையன்பட்டி மக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தர்மசிவம், ராமையன்பட்டி.
நாய்கள் ெதால்லை 
காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் இங்கு அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பொதுமக்கள், காரியாபட்டி. 
தேங்கி நிற்கும் மழைநீர் 
மதுரையில் சமீபத்தில் பெய்த மழையில் காமராஜர் சாலை, கீழவாசல், விளக்குத்தூண் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் இரு பக்கமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தீபாவளி நேரம் என்பதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்வதற்கு கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். சாலையோரம் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும்.
-சிவா, மதுரை.
தெப்பம் தூர்வாரப்படுமா?
மதுரை அழகர்கோவிலுக்கு உட்பட்ட தெப்பம், பொய்கைக்கரைபட்டி கிராமத்தில் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லை. மேலும் உரிய பராமரிப்பின்றி கிடக்கிறது. எனவே அழகர்கோவிலில் இருந்து இந்த தெப்பத்துக்கு வரும் வரத்துக்கால்வாயையும், தெப்பத்தையும் தூர்வாரி, தெப்பத்தின் நடுவில் உள்ள மண்டபத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டும்.
-வன்னியபெருமாள், பொய்கைக்கரைபட்டி.
பஸ்வசதி 
ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு செல்ல காலை நேரத்தில் போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு காலை நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
- பொதுமக்கள், ஆலங்குளம்.  

Next Story