அறச்சலூர் அருகே பரிதாபம்- மரத்தில் கார் மோதியது; 2 வாலிபர்கள் நசுங்கி சாவு
அறச்சலூர் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் நசுங்கி செத்தனர்.
அறச்சலூர்
அறச்சலூர் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் நசுங்கி செத்தனர்.
காரில் சென்றனர்
திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 30). அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் மாணிக்கம் (23). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள தனியார் மசாலா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் பூபதியும், மாணிக்கமும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தங்கள் நண்பரை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
2 பேர் சாவு
காரை பூபதி ஓட்டினார். அவரது அருகே மாணிக்கம் உட்கார்ந்திருந்தார். அறச்சலூர் கண்ணபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய கார் ரோட்டோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பூபதியும், மாணிக்கமும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் அறச்சலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த பூபதிக்கு திருமணம் ஆகி மனைவியும், 4 வயதில் ஒரு மகனும், 1 வாரமான பெண் குழந்தையும் உள்ளனர்.
மாணிக்கத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story