பெருந்துறை அருகே தனியார் ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


பெருந்துறை அருகே தனியார் ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 Oct 2021 9:05 PM GMT (Updated: 25 Oct 2021 9:05 PM GMT)

பெருந்துறை அருகே தனியார் ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பெருந்துறை
பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், விஜயபுரி ஊராட்சிக்கு உள்பட்டது பாலாஜி நகர். இங்கு ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதன் அருகே தனியார் ஒருவரின் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் ஊராட்சி ஆழ்குழாய் கிணறு அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள தனியார் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் நேற்று காலை ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த விஜயபுரி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்"அரசு ஆழ்குழாய் கிணறு அமைந்துள்ள இடத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் தான் தனியார் ஆழ்குழாய் தோண்ட வேண்டும். இது அரசு விதித்துள்ள சட்டம். இதை மீறி, யாரும் ஆழ்குழாய் அமைக்க முடியாது. அதற்கு ஊராட்சி சார்பில் தடையில்லா சான்றும் வழங்க முடியாது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை’ என்றார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story