புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Oct 2021 2:35 AM IST (Updated: 26 Oct 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

வெளியேறும் கழிவுநீர்
ஈரோடு பெருந்துறை ேராடு செல்வம் நகரில் குடிநீர் குழாய் உடைந்து கடந்து சில மாதங்களாக தண்ணீர் வீணாக ெசல்கிறது. இதனால் அந்த பகுதியில் ரோடும் பழுதடைந்துவிட்டுது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யவேண்டும்.
ராம், ஈரோடு.

மழையால் மாறிய மண்பாதை 
சத்தியமங்கலம் திருநகர் காலனி புவனேஸ்வரி அம்மன் கோவில் அருகே மண் ரோடு உள்ளது. மழை பெய்யும்போது இந்த ரோடு சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே இங்கு உடனே தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.டி.வடிவேல், சத்தியமங்கலம்.

அடிப்படை வசதி
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய 2-வது பகுதி ஸ்ரீகார்டனில்  சாலை, குடிநீர், சாக்கடை போன்ற எந்த வசதியும் இல்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.

குண்டும்-குழியுமான ரோடு
ஈரோடு மாநகராட்சி 16-வது வார்டு மாமரத்துப்பாளையம்- எல்லப்பாளையம் இணைப்பு சாலை, நரிப்பள்ளம்-கங்காபுரம் இணைப்பு சாலை ஆகிய ரோடுகள் போடப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. ஊராட்சியாக இருந்த இந்த பகுதிகளில் மாநகராட்சிகாக தரம் உயர்ந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை இந்த ரோடுகள்  சீரமைக்கப்படவில்லை. ரோடுகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குண்டும், குழியுமாகவும் பெரிய பள்ளங்களும் உள்ளன. இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் முதுகு தண்டுவட பாதிப்பு ஏற்பட்டு நோய் வாய்ப்பட்டு வருகிறார்கள். எனவே உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும்.
ப.தமிழரசி, சட்டப்பஞ்சாயத்துக்கு இயக்கம், ஈரோடு,

நடவடிக்கை எடுப்பார்களா?
கோபி தங்கமணி விரிவாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக ரோட்டில் குழி தோண்டினார்கள். ஆனால் பணிகள் முடிந்ததும் ரோடு போடப்படவில்லை. இதனால் ரோடு குண்டும்-குழியுமாக காணப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனே ரோடு போட கோபி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கோபி.

நடுத்தெருவில் மின்கம்பம்
அந்தியூர் அருகே கோவிலூர் கிழக்கு தெருவின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இதனால் இரவில் மின்சாரம் இல்லாத நேரங்களில் அந்த வழியாக வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மின் கம்பத்தில் மோதி அடிக்கடி விபத்துகளை சந்திக்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மின் கம்பத்தை அகற்றி ஓரமாக நடுவதற்கு மின்வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்ப்பொதுமக்கள், கோவிலூர்.

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
ஈரோடு சூரம்பட்டி காமராஜர் 3-வது வீதியில் பல மாதங்களாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே காமராஜர் 3-வது வீதியில் சாக்கடை கால்வாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சூரம்பட்டி.


Next Story