மகன் தள்ளிவிட்டதில் தொழிலாளி சாவு


மகன் தள்ளிவிட்டதில் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 27 Oct 2021 2:03 AM IST (Updated: 27 Oct 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

மகன் தள்ளிவிட்டதில் தொழிலாளி சாவு

நாகமலைபுதுக்கோட்டை
மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே பல்கலை நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயமணி(வயது 48). இவர்களது மகன் அரவிந்த், மகள் அருணா. தற்போது அரவிந்த் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தை, மகன் இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப் போது ஏற்பட்ட தகராறில் அரவிந்த் தனது தந்தையை தள்ளிவிட்டார். கீழே விழுந்த அண்ணாதுரை மயக்கம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயமணி கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story