வீட்டின் இரும்பு கேட்டில் சிக்கிய நாய்
வீட்டின் இரும்பு கேட்டில் சிக்கிய நாய்
கோவை
கோவை சாய்பாபாகாலனியில் உள்ள ஒரு வீட்டின் இரும்பு கேட்டின் வளையத்திற்குள் நாயின் தலை சிக்கிக்கொண்டது. அது எடுக்க முயற்சித்து பார்த்து பலனின்றி அதிலே படுத்துக்கொண்டது.
இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் தனசேகரன் பாண்டியன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது நாயின் தலைப்பகுதி இரும்பு கேட்டில் இருந்த வளையத்திற்குள் நன்றாக சிக்கி இருந்தது.
இதையடுத்து வெல்டிங் மூலம் இரும்பு வளையத்தை வெட்டி எடுக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் நாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதப்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் அந்த நாயின் தலைப்பகுதியில் விளக்கு எண்ணைய் ஊற்றினர். பின்னர் நாயின் வாயை கட்டினர். தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக அந்த இரும்பு வளையத்தில் இருந்து தெருநாயை விடுவித்தனர்.
சுமார் 10 மணி நேரம் வரை அந்த நாய் இரும்பு வளையத்திற்குள் சிக்கி இருந்ததால் மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அந்த நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர்.
Related Tags :
Next Story