மாநில நீச்சல் போட்டி:மதுரை மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை


மாநில நீச்சல் போட்டி:மதுரை மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை
x
தினத்தந்தி 27 Oct 2021 8:14 PM GMT (Updated: 2021-10-28T01:44:57+05:30)

மதுரை மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

மதுரை
தூத்துக்குடியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் மதுரை வீரர்கள் 16 தங்கம், 26 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்கள் வென்று 2-ம் இடம் பெற்றனர். பதக்கம் வென்ற நீச்சல் வீரர்களை மண்டல முதுநிலை மேலாளர் புண்ணியமூர்த்தி, தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை விடுதி மேலாளர் ராஜா, மதுரை மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், நீச்சல் பயிற்சியாளர் வேல்முருகன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Next Story