மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
பேரையூர்
பேரையூர் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது பாறைப்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 38) என்பவர் விற்பனை செய்வதற்காக 34 மதுபாட்டில்கள் வைத்திருந்தபோது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல் சந்தையூரை சேர்ந்த குருசாமி (54) என்பவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களையும், செல்லையாபுரத்தை சேர்ந்த தங்கமணி (35) என்பவரிடமிருந்து 99 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது புதுக்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகில் சந்தேகப்படும்படி நின்றவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூத்தியார்குண்டை சேர்ந்த லட்சுமணன்(44) என்பதும், அவர் அனுமதியின்றி மதுபாட்டில்களை வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து லட்சுமணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story