பிரபல தனியார் நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை
ஈரோட்டில் பிரபல தனியார் நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.
ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு பிரபல தனியார் மாட்டுத்தீவனம், முட்டை பவுடர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஈரோட்டில் உள்ள இந்த தனியார் நிறுவன அதிபர் வீட்டுக்கு நேற்று காலை 8.30 மணி அளவில் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் நுழைந்தனர். அவர்கள் வீடு மற்றும் வீட்டையொட்டி உள்ள நிறுவன அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டனர். இதுபோல் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குழும நிறுவனங்கள், அலுவலகங்கள், ஆலைகளிலும் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடந்ததாக தெரிகிறது. இதே நேரத்தில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்த குழும நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்ததாக தெரிகிறது. மொத்தமாக ஒரே நேரத்தில் 35 இடங்களில் சோதனை நடந்ததாக கூறப்பட்டது. நேற்று மாலைவரை தொடர்ந்து சோதனை நடந்தது. இதில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்ற விவரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. இந்த சோதனை குறித்த தகவல் ஈரோடு பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story