திருவள்ளூரை அடுத்த நேமம் ஊராட்சியில் பட்டா சிறப்பு முகாம்
திருவள்ளூரை அடுத்த நேமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மதுசூதனன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் கொத்தியம்பாக்கம் தேசிங்கு, பூந்தமல்லி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், பூந்தமல்லி தாசில்தார் சங்கர், நேமம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் கலந்து கொண்டு பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
Related Tags :
Next Story