மாணவிக்கு பாலியல் தொல்லை


மாணவிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 28 Oct 2021 7:15 PM IST (Updated: 28 Oct 2021 7:15 PM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு பாலியல் தொல்லை

பொள்ளாச்சி

பள்ளிக்கு அழைத்து செல்லும் போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆட்டோ டிரைவர்

பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரத்தை சேர்ந்தவர் பிரதவுஸ் (வயது 33). ஆட்டோ டிரைவரான இவர் தனது ஆட்டோவில் மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு கொண்டு சென்று விடுவது, பின்னர் மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் அவரது ஆட்டோவில் தனியார் பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் தினமும் பள்ளிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வஞ்சியாபுரத்தை சேர்ந்த இயாஸ் (25) என்பவரை பிரதவுஸ் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டதாக தெரிகிறது.

போக்சோவில் கைது

பின்னர் சிறிது தூரம் சென்றதும் ஆட்டோவை நிறுத்தி பிரதவுஸ் ஆட்டோவின் பின்பக்க இருக்கையில் அந்த மாணவியின் அருகில் உட்கார்ந்து கொண்டார். இயாஸ் ஆட்டோவை ஓட்டி சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த சிறுமிக்கு பிரதவுஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து எஆட்டோ டிரைவர் பிரதவுஸ், இயாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story