நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2021 10:19 PM IST (Updated: 28 Oct 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்: 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலுபாரதி முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம், மாநிலக்குழு உறுப்பினர் மணி, மாவட்ட பொருளாளர் ராஜாங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோவிலூர் பகுதியில் நகை அடகு, ஏலச்சீட்டு, முதலீடு என்ற பெயரில் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதிநிறுவனம் மீது பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story