குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2021 1:58 AM IST (Updated: 29 Oct 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

மதுரை
திருமங்கலம் சிவரக்கோட்டை, பசும்பொன் தெருவை சேர்ந்தவர் சங்கையா. இவரது மகன் மதன்(வயது 46). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது கொலை மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தாக பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர்.
அலங்காநல்லூர் அருகே பெரியஊர்சேரியை சேர்ந்தவர் குபேந்திரன்(28). இவர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளார். இந்தநிலையில் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் அனிஷ்சேகர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

Next Story