கரும்பு விவசாயிகள் போராட்டம்


கரும்பு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2021 1:59 AM IST (Updated: 29 Oct 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூரில் சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அலங்காநல்லூர்
அலங்காநல்லூரில் சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டம்
தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி அலங்காநல்லூர், கேட்டுகடையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில்  தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் பழனிச்சாமி தலைமை தாங்கினார். 
மாநில செயலாளர் கதிரேசன், மாவட்ட தலைவர் இளங்கோவன், பொருளாளர் ராஜாமணி, அடக்கி வீரணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் குமார் போராட்டத்தை தொடங்கி வைத்தார். 
கோஷம்
இதில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தியும், தொடர்ந்து இந்த வருடம் ஆலை இயங்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி வழங்க கோரியும், அரவை செய்தவுடன் கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது கரும்பு விவசாயிகள் கைகளில் கரும்புகளை வைத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் சங்க நிர்வாகி பாரைப்பட்டி போஸ் நன்றி கூறினார்.
1 More update

Next Story