புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Oct 2021 2:08 AM IST (Updated: 29 Oct 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

மதுரை
தேங்கி நிற்கும் கழிவுநீர் 
ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடி 25-வது வார்டு முதல் தெருவில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடாக உள்ளது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-காமேஷ், காட்டு பரமக்குடி. 
சாலையில் சுற்றும் கால்நடைகள் 
மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் பகுதியில் அதிக அளவில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. கால்நடைகளால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. அவைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு இருப்பதால் சாலையில் செல்லவே பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சதீஷ், மதுரை. 
ஆபத்தான மின்கம்பம் 
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியம் கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்தும், சற்று சாய்ந்த நிலையிலும் உள்ளது. மின்கம்பம் எப்போது விழும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வேண்டும். 
-ஜெயபால், கண்டுகொண்டான் மாணிக்கம். 
சாலை வசதி வேண்டும் 
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா எம்.சவேரியார்பட்டணம் பகுதியில் சாலை வசதி இல்ைல. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி வாகனங்களும் பழுதாகி விடுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சாலமன் தங்கதுரை.

Next Story