குளிர்பானம் குடித்த பெண் சுருண்டு விழுந்து பலி
சென்னையை அடுத்த மணலி அருகே குளிர்பானம் குடித்த பெண் சுருண்டு விழுந்து பலியானார்.
சென்னையை அடுத்த மணலி, ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). இவருடைய மனைவி செல்வி (52). இவர், ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் செல்வி தனக்கு கடுமையாக வயிறு வலிப்பதாக கூறினார். உடனே அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் (60) என்பவர் பெட்டிக்கடை ஒன்றில் அவருக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்தார்.
அதை குடித்த செல்விக்கு திடீரென வாயில் நுரைதள்ளி, சுருண்டு விழுந்தார். மணலி போலீசார், அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததனர். குளிர்பானம் குடித்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story