கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையிடம் 10½ பவுன் நகை பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையிடம் 10½ பவுன் நகை பறிப்பு
கோவை
கோவை வி.கே.கே. மேனன் ரோடு வெங்கிடுசாமி லே அவுட்டை சேர்ந்தவர் பூண்டி. இவரது மனைவி அன்புக்கரசி (வயது 39). இவர் கோவ சின்னசாமி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அன்புக்கரசி பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கு வந்தார். பின்னர் அவர், ஆசிரியை அன்புக்கரசியிடம் தன்னுடைய மகனை பள்ளியில் சேர்க்க வேண்டும். எனவே எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும், பள்ளியில் சேர்ப்பதற்கான எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படும் என்று கேட்டுள்ளார். இதனை நம்பிய அன்புக்கரசி மாணவர் சேர்க்கை குறித்த முழு விபரங்களையும் அந்த நபரிடம் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் அந்த ஆசாமி, பேசிக்கொண்டிருந்த போதே, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை அன்புக்கரசி கழுத்தில் வைத்தார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியை என்ன செய்வது என்று திகைத்து நின்றார். பின்னர் அந்த ஆசாமி, ஆசிரியையிடம் கழுத்தில் அணிந்து இருக்கும் நகைகளை கழற்றி தரும்படி கூறியுள்ளார்.
இதனால் பயந்த அந்த ஆசிரியை தான் அணிந்திருந்த 10½ பவுன் தங்கநகைகளை கழற்ற தொடங்கினார். உடனே அந்த ஆசாமி நகைகளை பறித்தவாறு, கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதன்பின்னர் அதிர்ச்சியில் இருந்து மீண்ட அந்த ஆசிரியை அதன்பின்னர் சத்தம் போட்டு உள்ளார்.
ஆனால் அதற்குள் அந்த ஆசாமி ஓடிவிட்டதால், பிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story