கலெக்டர் காலில் விழுந்து கதறிய விவசாயிகள்


கலெக்டர் காலில் விழுந்து கதறிய விவசாயிகள்
x
கலெக்டர் காலில் விழுந்து கதறிய விவசாயிகள்
தினத்தந்தி 29 Oct 2021 10:30 PM IST (Updated: 29 Oct 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் காலில் விழுந்து கதறிய விவசாயிகள்

கோவை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேரடியாக நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். 

முன்னதாக கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் அக்கரைசெங்கபள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கலூர், இலுப்பநத்தம், பள்ளிபாளையம் 6 பஞ்சாயத்தில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னூர் சுற்றுவட்டார பகுதி பொது மக்கள், விவசாயிகள் 200 பேர் கோவை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுனர்.

இது தொடர்பாக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில்,  அன்னூர் வட்டாரத்தில் 4 வருவாய் கிராமங்கள், மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் 2 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 3800 ஏக்கர் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. 

இதனால் இந்த பகுதி விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் குறை தீர்ப்பு கூட்டத்தில்மனு கொடுக்க வந்த மூதாட்டி உள்பட சிலர் கலெக்டரின் காலில் விழுந்து, நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என்று கதறினர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story