வழக்கு விசாரணை கோவை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம்
வழக்கு விசாரணை கோவை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம்
கோவை
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 35 வயது பெண். இவரது கணவரும், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அஜய் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு கூட்டாக சேர்ந்து கார்மெண்ட்ஸ் தொழில் தொடங்கி நடத்தி வந்தனர்.
இதன்காரணமாக அஜய், அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அஜய்க்கு அந்த பெண்ணின் மீது மோகம் ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே அந்த பெண்ணை அடைய அவர் திட்டமிட்டு வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் மட்டும் வீட்டில் இருந்து உள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அஜய், ஒரு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து, அந்த பெண்ணிடம் கொடுத்தாக தெரிகிறது. பின்னர் மயக்க மருந்து இல்லாத குளிர்பானத்தை அஜய் குடித்து உள்ளார்.
குளிர்பானத்தை குடித்ததும் அந்த பெண் சிறிது நேரத்தில் மயக்கமடைந்து விட்டார். இதையடுத்து மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை, அஜய் பாலியல் பலாத்காரம் செய்தாக கூறப்படுகிறது. பின்னர் மயக்கம் தெளிந்த எழுந்த அந்த பெண், அஜய்யிடம் சண்டை போட்டு உள்ளார்.
அப்போது அஜய், இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று அந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன அந்த பெண் யாரிடமும் கூறவில்லை.
இதனிடையே அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் முக தோற்றத்தை பார்த்ததும் அந்த பெண்ணின் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டு, தனது மனைவியிடம் சண்டைபோட்டார்.
இதையடுத்து அந்த பெண் நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர், இதுகுறித்து அஜய்யிடம் கேட்டார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண், மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. குறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவ நடந்த இடம் பீளமேடு பகுதி என்பவதால் இந்த வழக்கை கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story