பெண் மேற்பார்வையாளர் பணி நீக்கம்
பெண் மேற்பார்வையாளர் பணி நீக்கம்
அன்னூர்
கோவையை அடுத்த அன்னூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்) கீழ் நடைபெறும் பணிகள் குறித்து ஒவ்வொரு ஊராட்சியாக ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று அன்னூர் ஒன்றியதில் உள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் பட்டக்காரன் புதூரில் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு ஊரின் மூத்த குடிமகன் ராமசாமி தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வள அலுவலர் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கிராமசபை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அப்போது கடந்த 8 ஆண்டுகளாக இந்த திட்டத்திற்கான மேற்பார்வையாளராக இருந்த பத்மாவதி என்பவர், பணிகளுக்கு 20 நபர்கள் வேலை செய்ததாக வருகை பதிவு செய்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் முறைகேடு செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பத்மாவதியை அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர். மேலும் முறைகேடு செய்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்தை உடனடியாக ஊராட்சிக்கு செலுத்தவும் உத்தரவிட்டனர்.
கூட்டத்தில் ஒன்றிய மேற்பார்வையாளர் ஜோஸ்பின் உட்பட பொதுமக்கள், வட்டார கிராம மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story