சாலையில் நடமாடும் குதிரைகள்
ஊட்டியில் உள்ள சாலையின் நடுவே குதிரைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இங்குள்ள காந்தல் பிரதான நகரில் சுற்றித்திரியும் குதிரைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சாலையில் குதிரைகள் சுதந்திரமாக நடமாடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
ஒயர்கள் அப்புறப்படுத்தப்படுமா?
| கோவை புலியகுளம் பெரியார் நகர் சந்திப்பில் கேபிள் ஒயர்கள் மாட்டபட்ட கம்பம் சாய்ந்த நிலையில் இருக்கிறது. அந்த கம்பம் எந்த நேரத்திலும் விழக்கூடிய அபாய நிலை நீடித்து வருகிறது. மேலும் அந்தப்பகுதியில் ஒயர்கள் அதிகளவில் தரையில் போடப்பட்டு இருக்கிறது. இதனால் நடந்து செல்பவர்கள் கால் தடுக்கி கீழே விழந்து காயம் ஏற்படக்கூடிய நிலை நீடித்து வருகிறது. எனவே அதை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும். |
போக்குவரத்து நெரிசல்
| கிணத்துக்கடவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் எப்போதுமே இருக்கும். தற்போது தீபாவளியையொட்டி பலர் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வருவதால் அங்கு கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். |
| தர்மலிங்கம், கிணத்துக்கடவு. |
பழுதான தார்சாலை
| கிணத்துக்கடவு நல்லட்டிபாளையத்தில் இருந்து கோடங்கி பாளையம் செல்லும் ரோடு பல பகுதிகளில் பழுதாகி குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங் களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பழுதான தார்சாலையை சரிசெய்ய வேண்டும். |
| கணேசமூர்த்தி, நல்லட்டிபாளையம். |
குவிந்து கிடக்கும் குப்பைகள்
| கோவை நீலிக்கோணாம்பாளையம் அருகே உள்ள தாமோதர சாமி லே-அவுட் பகுதியில் குப்பைகள் சரிவர சுத்தம் செய்யப் படுவது இல்லை. இதனால் அங்கு குப்பைகள் அனைத்தும் மலைபோல குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதால் இங்குள்ள பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும். |
| குமாரவேல், தாமோதரசாமி லே-அவுட். |
விபத்தை ஏற்படுத்தும் சாலை
| அன்னூரில் இருந்து ஓதிமலை செல்லும் சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் போடப்பட்டது. ஆனால் இந்த சாலையில் வடக்கலூர் பகுதியில் பல இடங்களில் பழுதாகி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இந்த தார்சாலையை சரிசெய்ய வேண்டும். |
தெருநாய்கள் தொல்லை
| கோவை மாநகராட்சி 1-வது வார்டு சேரன் காலனி மற்றும் முத்துநகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. தெருக்களில் கூட்டங்கூட்டமாக உலா வரும் நாய்கள் அந்த வழியாக செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது குறுக்கே பாய்வதால் விபத்துகளும் நடந்து வருகின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். |
| கீர்த்திபிரியன், துடியலூர். |
பொதுமக்கள் அவதி
| கோவை இடையர்பாளையம் ஜெ.ஜெ.நகர் பாரதியார் தெருவில் சாலை போட ஜல்லி கற்கள் போடப்பட்டது. ஆனால் இதுவரை சாலை போட நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த கற்கள் அனைத்தும் சாலையை அடைத்து போடப்பட்டு உள்ளதால், வாகனங்களில் செல்ல முடியவில்லை. அதுபோன்று நடந்து செல்லவும் சிரமமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை போடும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். |
கழிவுநீரால் துர்நாற்றம்
| கோவை மாநகராட்சி 25-வது வார்டு சிரியன் சர்ச் ரோட்டில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய வேண்டும். |
வீணாக செல்லும் குடிநீர்
| கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் யூனியன் அலுவலகம் ரோடு பாலம் சந்திப்பில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். |
| முருகேசன், கவுண்டம்பாளையம். |
கோழிக்கழிவுகளால் அவதி
| கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் கூ.கவுண்டம் பாளையம் பகுதியில் உள்ள பாலவிநாயகர் நகர் செல்லும் சாலை யில் கோழிக்கழிவுகள், இறந்த நாய் உடல்களை வீசிச்சென்று வருகிறார்கள். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரி கள் அவற்றை அகற்றுவதுடன், அங்கு இதுபோன்ற கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். |
| பாலகிருஷ்ணன், பாலவிநாயகர் நகர். |
சாக்கடை கால்வாயில் அடைப்பு
| கோவை 100-வது வார்டு கணேசபுரம் செல்வவிநாயகர் கோவில் அருகில் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் சாக்கடை கால்வாயில் உள்ள பாலம் இடிந்து உள்ளதால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை சரிசெய்ய வேண்டும். |