மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
x
தினத்தந்தி 29 Oct 2021 11:23 PM IST (Updated: 29 Oct 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் சர்வீஸ் சாலையில் உள்ள குழியில் விழுந்து மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியானார். 

டிரைவர் 

கிணத்துக்கடவு அருகே உள்ள காணியாலாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 53), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பேபி (51). இவர்களுக்கு கலைச்செல்வி என்ற மகளும், சிவக்குமார் (21), கவுரிசங்கர் (17) ஆகிய 2 மகன்களும் இருந்தனர்.

 இதில் கலைச்செல்விக்கு திருமணமாகிவிட்டது, சிவக்குமார் தனியார் தொழிற்சாலையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கவுரிசங்கர் கல்லூரியில் படித்து வருகிறார். 

தவறி விழுந்தார் 

இந்த நிலையில் சிவக்குமார் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் உள்ள தனது தாத்தா நடராஜை பார்க்க மோட்டார் சைக்கிள் மூலம் வீட்டில் இருந்து புறப்பட்டார். அவர் கிணத்துக்கடவு மேம்பாலம் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் வந்து கொண்டு இருந்தார்.

அங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது சர்வீஸ் சாலையின் நடுவில் உள்ள குழியில் மோட்டார் சைக்கிள் இறங்கியது. இதனால் நிலைதடுமாறிய சிவக்குமார் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். 

பரிதாப சாவு 

இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இத னால் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை  அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண் போட்டு அந்த குழியை மூடினார்கள்.

 இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த சாலையில் ஏற்பட்ட குழியை மூடக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ் சாலைத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. எனவே இனியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


Next Story