வைகையில் கிடைத்த அம்மன் சிலை
சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த சிலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது
சோழவந்தான்
சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த சிலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அம்மன் சிலை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் கருங்கல் சிலை பீடத்துடன் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ்க்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் வைகை ஆற்றுக்கு சென்று தண்ணீருக்குள் கிடந்த சிலையை கரைக்கு எடுத்து வந்தனர்.
ஒப்படைப்பு
கண்டெடுக்கப்பட்ட சிலை சுமார் 3 அடி உயரம் பீடத்துடன் கருங்கல்லால் ஆனது. கையில் கிளியுடன் சிலை இருப்பதால் இதை மீனாட்சி அம்மன் சிலை என்று பக்தர்கள் தெரிவித்தனர். இந்த சிலையை வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நவநீத கிருஷ்ணன் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story