செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
செங்கல்பட்டு டவுன், சிங்கப்பெருமாள் கோவில், ஆப்பூர், தென்மேல்பாக்கம், குன்னவாக்கம், செட்டி புண்ணியம், வீராபுரம், திம்மாவரம், ஆத்தூர், பாலூர், மனப்பாக்கம், ஆலப்பாக்கம், வல்லம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் லேசான தூறல் முதல் பலத்த மழை பெய்தன.
கோரிக்கை
இதனால் வேலைக்கு செல்வோரும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்குள்ளானார்கள். இந்த தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள், குட்டைகள் வேகமாக நீர் நிரம்பி வருகின்றன. மேலும் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் கால்வாய்கள் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது. ஒரு சில இடங்களில் கால்வாய்கள் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன. பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்த கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story