திருத்தணி முருகன் கோவிலில் வெளிப்புற ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திருத்தணி முருகன் கோவிலில் வெளிப்புற ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 30 Oct 2021 12:19 PM IST (Updated: 30 Oct 2021 12:19 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி முருகன் கோவிலில் வெளிப்புற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வெளிப்பகுதியில் திருக்கோவில் நிர்வாகத்தால் கடைகள் ஏலம் விடப்பட்டு நடத்தப்படுகின்றன. 

இந்தக் கடைகள் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட கூடுதலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தன. இதுகுறித்து பக்தர்கள் புகார் தெரிவித்ததையடுத்து கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான பரஞ்சோதி முன்னிலையில் நேற்று இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதை பார்த்த பக்தர்கள் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Next Story