புதுச்சேரி விடுதலை பெற்ற நாள்; போலீஸ் அணிவகுப்பு இறுதி ஒத்திகை


புதுச்சேரி விடுதலை பெற்ற நாள்; போலீஸ் அணிவகுப்பு இறுதி ஒத்திகை
x
தினத்தந்தி 30 Oct 2021 3:37 PM IST (Updated: 30 Oct 2021 3:37 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியின் விடுதலை நாள் நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, போலீஸ் அணிவகுப்பின் இறுதி ஒத்திகை இன்று நடைபெற்றது.

புதுச்சேரி,

ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. ஆனால் பிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரிக்கு அப்போது விடுதலை கிடைக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரிக்கு பிரெஞ்ச் ஆட்சியில் இருந்து விடுதலை கிடைத்தது. இந்த நாள் புதுச்சேரியின் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டும் புதுச்சேரியின் விடுதலை நாள், கடற்கரை சாலையில் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினத்தில் போலீசாரின் அணிவகுப்பு, கொடியேற்றம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும். அந்த நிகழ்வில் புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார். அதற்கான இறுதி ஒத்திகை புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று நடைபெற்றது.

Next Story