ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை, பணம் திருட்டு


ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை, பணம் திருட்டு
x
ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை, பணம் திருட்டு
தினத்தந்தி 30 Oct 2021 5:23 PM IST (Updated: 30 Oct 2021 5:23 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை, பணம் திருட்டு

கோவை

கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 68). இவர் நேற்று முன்தினம் சரவணம்பட்டியில் இருந்த காளப்பட்டி செல்ல தனியார் பஸ்சில் ஏறி உள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்த போது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலி மாயமானது. மர்ம ஆசாமி ஒருவர் கைவரிசை காட்டிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளியம்மாள் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல் கோவை சிந்தாமணிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி மாணிக்கம் (59). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிகிறார். இவர் சம்பவத்தன்று டவுன்ஹாலில் இருந்து சாய்பாபா காலனிக்கு பஸ்சில் சென்றார். பின்னர் சாய்பாபா காலனி பஸ் நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கிய அவர், தான் வைத்திருந்த கைப்பபையில் இருந்த பணத்தை தேடினார். ஆனால் அதில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை மர்ம நபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணிக்கம் கோவை சாய்பாபாகாலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகரில் தீபவாளி கூட்டத்தை பயன்படுத்தி பஸ்சில் பயணம் செய்யும் பொதுமக்களின் நகை மற்றும் பணத்தை ஒரு கும்பல் குறி வைத்து பறித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் 3 பெண்களிடம் நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் நடைபெற்றது.

 கோவையில் தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்யும் பெண்களை குறிவைத்து நகை பணம் திருடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story