வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி


வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 30 Oct 2021 7:44 PM IST (Updated: 30 Oct 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் நடந்த 7-ம் கட்ட முகாமில் மதியத்துக்கு பிறகு வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் போடப்பட்டது.

ஊட்டி

நீலகிரியில் நடந்த 7-ம் கட்ட முகாமில் மதியத்துக்கு பிறகு வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் போடப்பட்டது. 

7-ம் கட்ட முகாம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று 7-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக 360 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் பழங்குடியின கிராமங்களில் வசித்து வருகிறவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 20 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

மையங்களில் மதியம் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு அருகே உள்ள குடியிருப்புகளுக்கு செவிலியர்கள், தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர். 

சப்-கலெக்டர் ஆய்வு

ஊட்டி பள்ளிகளில் நடந்த தடுப்பூசி முகாமை ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா ஆய்வு செய்தார். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மைய வாகன நிறுத்துமிடத்தில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். அதில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து செலுத்தப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, நீலகிரியில் 7-ம் கட்ட சிறப்பு முகாமில் 36 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது 38 ஆயிரத்து 100 டோஸ்கள் இருப்பு உள்ளது. மேலும் கோவையில் இருந்து 24 ஆயிரம் டோஸ்கள் வரவழைக்கப்படுகிறது. தொற்று பரவலை தடுக்க சுற்றுலா பயணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றார். கோத்தகிரியில் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமில் முதல் டோஸ் செலுத்திய 3 பேருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.


Next Story