தனபால், ரமேஷிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை


தனபால், ரமேஷிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Oct 2021 7:44 PM IST (Updated: 30 Oct 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

கோடநாடு வழக்கு தொடர்பாக தனபால், ரமேஷிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை திரட்டி வருகின்றனர்.

ஊட்டி

கோடநாடு வழக்கு தொடர்பாக தனபால், ரமேஷிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை  திரட்டி வருகின்றனர்.

போலீசாருக்கு சந்தேகம்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன்பின்னர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் திடீரென சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். இது சாதாரண விபத்தா அல்லது கூட்டுச்சதியா என்ற சந்தேகம் எழுந்தது.

முக்கிய தகவல்கள்

இதன் காரணமாக கோடநாடு வழக்கு விசாரணையை கடந்த ஆகஸ்டு மாதம் முதல் போலீசார் தீவிரப்படுத்தினர். அப்போது கிடைத்த தகவல்கள் மூலம் வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அதாவது தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை சோலூர்மட்டம் போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

தனித்தனியாக ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து, பல்வேறு கேள்விகளை கேட்டு முக்கிய தகவல்களை திரட்டி வருகின்றனர். மேலும் விபத்தில் கனகராஜ் இறந்த இடத்துக்கு அழைத்து சென்றும், அவரது செல்போனில் நடந்த தகவல் பரிமாற்றங்களை அழிக்க உதவிய இடத்துக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.


Next Story