கம்யூனிஸ்டு கட்சியினர் ஒப்பாரி போராட்டம்
கம்யூனிஸ்டு கட்சியினர் ஒப்பாரி போராட்டம்
கோவை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் ஒரு கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, அதை நடுரோட்டில் வைத்து கும்மியடித்ததுடன், ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மாதச்சம்பளம் வாங்குவோர், இனி மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக சைக்கிளில்தான் அலுவலகம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. முன்னதாக ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் உள்பட பலர் சைக்கிளில் வந்து கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story