அனைத்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டம்
அனைத்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டம்அனைத்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டம்
கோவை
கோவையில் இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.) மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு. அகில இந்திய தலைவர் ஹேமலதா, துணை தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து சி.ஐ.டி.யு. மாநில தலைவர் அ.சவுந்திரராஜன் கூறியதாவது:-
தீபாவளிக்கு சில தினங்களே இருக்கிற நிலையில் கோவை மாவட்டத்தில் பல நிறுவனங்களில் இதுவரை போனஸ் கொடுக்கப்படவில்லை. எனவே கடந்த ஆண்டு வழங்கப்பட்ட போனஸ் தொகை கொடுக்க வேண்டும். இதேபோல பஞ்சாலைகளில் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க குழு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பணிகளில் அவுட்சோர்சிங் முறையினை கைவிட வேண்டும். மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைகளை திறக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாதிப்புகளை தடுக்க அனைத்து பணியிடங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து மாவட்டங்களிலும் சைக்கிள் யாத்திரை, மாட்டு வண்டி பேரணி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சி.ஐ.டி.யு. அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநில தலைவர் ஜி.சுகுமாரன், மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு மற்றும் கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
------------------
Related Tags :
Next Story






