உத்திரமேரூர் அருகே பிளஸ்-1 வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
உத்திரமேரூர் அருகே பிளஸ்-1 வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள சாத்தனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (வயது 43). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகன் கந்தவேல் (16). தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சோலையப்பன் மகனை அழைத்து கடையை பார்த்துக்கொள். நான் செங்கல்பட்டு வரை சென்று விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு செங்கல்பட்டுக்கு சென்றுவிட்டார்.
அப்போது கந்தவேல் மற்றும் சகோதரிகள் இருவரும் கடைக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது விளையாட்டுத்தனமாக கடையை பார்க்காமல் விளையாடிக்கொண்டிருக்கிறாயே. அப்பா வரட்டும் சொல்லுகிறேன் என்று சகோதரிகள் அவரை பயமுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்த கந்தவேல் கடையின் உள்ளே இருந்த பூஜை அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கந்தவேலை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story