புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 31 Oct 2021 1:53 AM IST (Updated: 31 Oct 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

மதுரை 
பயணிகள் அவதி 
விருதுநகர்-பெரிய பேராலி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் பழுதடைந்துள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் பஸ்சின் மேற்கூரை வழியாக தண்ணீர் வடிகிறது. இதனால் பஸ்சில் பயணம் ெசய்யும் பயணிகள் பஸ்சுக்குள் குடைபிடித்துக்கொண்டு நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சிவா, மதுரை. 
சாலை வேண்டும் 
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சேடப்பட்டி ஒன்றியம் செம்பரனி கிராமம் சென்னம்பட்டி காலனியில் சாலை வசதி இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலத்தில் இந்த சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி சாலை வசதி செய்து கொடுக்கப்படுமா?
ரஞ்சித், பேரையூர். 
தேங்கி நிற்கும் மழைநீர் 
 ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம் காத்தான் முதல் நிலை ஊராட்சி பாரதிநகர் 8-வது தெருவில் மழைநீர், சாக்கடை கழிவுடன் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அசோக்குமார், ராமநாதபுரம். 
தொற்று நோய் அபாயம் 
 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் 15-வது வார்டு சின்னதோப்பு தெருவில் மழைநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே சாலைகளிலும், வீடுகளின் முன்பும் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். 
தருணிகா சாய் ஆனந்த், திருப்பத்தூர். 
குண்டும், குழியுமான சாலை 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள சாலையானது மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக முதியவர்களும், கர்ப்பிணிகளும் இந்த சாலையில் வாகனத்தில் செல்லும் போது மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும். 
பொதுமக்கள், அருப்புக்கோட்டை. 

Next Story