முத்தியால்பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு 25 கிலோஅரிசி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் 7-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி காஞ்சீபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 670 பேருக்கு தலா 25 கிலோ பொன்னி அரிசி வழங்கினார்.
இதில் முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் பிரேமாரஞ்சித்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதியம்மாள், குடிநீர் வடிகால் வாரியம் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story