செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 85 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 85 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 694- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 234 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2504- ஆக உயர்ந்துள்ளது. 956 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 940- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 349 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1258 -ஆக உயர்ந்துள்ளது. 333 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story