5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தினத்தந்தி 31 Oct 2021 8:45 PM IST (Updated: 31 Oct 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பொள்ளாச்சி அருகே கிராமத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தவர் 14 வயது மாணவி. இவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கடந்த ஜூலை மாதம் போக்சோசட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 இவர்களில் மகரஜோதி (வயது31), முத்துமுருகன் (19), பிரவீன்குமார்(19), நாகராஜ் (19), ஜெயப்பிரகாஷ் (19) ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சமீரனுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பரிந்துரை  செய்தார்.  அதன் பேரில், 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகல் சிறையில் இருக்கும் 5 பேரிடம் வழங்கப்பட்டது. 
---------------------------

Next Story